ஆஸ்திரேலியர்களில் சில பிரிவினருக்கு நான்காவது சுற்று கோவிட் தடுப்பூசி பரிந்துரை!

கொரோனா வைரஸ் குறித்து மார்ச் மாதம் 25ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Minister for Health Greg Hunt says it is safe to have influenza and COVID-19 vaccines at the same visit to vaccine administrators.

Minister for Health Greg Hunt says it is safe to have influenza and COVID-19 vaccines at the same visit to vaccine administrators. Source: AAP Image/Mick Tsikas

குளிர்கால நெருங்கும்நிலையில், குறிப்பிட்ட சில பிரிவினர் கோவிட் தடுப்பூசியின் நான்காவது சுற்றினை, அதாவது இரண்டாவது booster தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு, நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) பரிந்துரைத்துள்ளது.

முதலாவது booster தடுப்பூசியைப் பெற்றதிலிருந்து நான்கு மாதங்கள் கழித்து, இரண்டாவது booster தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என (ATAGI) தெரிவித்துள்ளது.

இதன்படி 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட பூர்வீக குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு பின்னணி கொண்டவர்கள், முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்களில் வசிப்பவர்கள் மற்றும் கடுமையான நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகொண்ட 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், இந்த இரண்டாவது booster தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

NSW, விக்டோரியா, ACT, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு  ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 26 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 23,702 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர். 1,182 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 43 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 9,244 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 பேர் மரணமடைந்தனர். 253 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 19 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 1,786 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  24 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

ACT- இல் புதிதாக 1,122 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார். 42 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 9,730 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3 பேர் மரணமடைந்தனர். 265 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 14 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,549 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர். 157 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 8,133 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.   209 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

NT-இல் புதிதாக 335 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 25 March 2022 3:39pm


Share this with family and friends