அக்டோபர் 14 முதல், கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டியதில்லை.
வெள்ளிக்கிழமை பிரதமர் Anthony Albanese தலைமையில் நடைபெற்ற தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த "ஒருமித்த முடிவு" எடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் அதிக ஆபத்துள்ள அமைப்புகளில் பணிபுரிபவர்களைத் தவிர ஏனையவர்களுக்கான pandemic leave disaster கொடுப்பனவுகளும் நிறுத்தப்படும் எனவும் என்று பிரதமர் Anthony Albanese கூறினார்.
தற்போது நோய் அறிகுறியற்ற ஆஸ்திரேலியர்கள் ஐந்து நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.
ஆலோசனை மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறது என்று பிரதமர் Albanese கூறினார். தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் பிரச்சாரங்களை தொடர்ந்து நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து மாநில மற்றும் பிராந்திய தலைவர்கள் ஆலோசித்துள்ளனர் எனவும் பிரதமர் கூறினார்.
"அதிக ஆபத்துள்ள விடயங்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குவோம். இந்தச் சிக்கல்களை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம், மேலும் டிசம்பரில் மற்றொரு விவாதத்தை நடத்துவோம்." எனவும் பிரதமர் Albanese குறிப்பிட்டார்.
தொற்றுநோய்க்கெதிரான ஆஸ்திரேலியாவின் அவசரகால பதில்நடவடிக்கைகள் அநேகமாக முடிந்துவிட்டது என, ஆஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி Paul Kelly தெரிவித்தார்.
இருப்பினும், தொற்றுநோய் இன்னமும் முடிவடையவில்லை என்றும், எதிர்கால கோவிட் அலைகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் காணப்பட்டதைப் போலவே இருக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
ஆஸ்திரேலியாவில் தற்போது கோவிட் நோய்த்தொற்றுகள், மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் முதியோர் பராமரிப்பு மையங்களில் ஏற்படும் பரவல்கள் குறைவாக உள்ளதாகவும் பேராசிரியர் Paul Kelly கூறினார்.
இதேவேளை கோவிட் தொற்றை Flu போல நினைக்கக்கூடாது என்று ஆஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் பேராசிரியர் Steve Robson எச்சரித்தார்.
"கோவிட் என்பது Flu என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் ஒரு கற்பனை நிலத்தில் வாழ்கிறீர்கள். கோவிட் என்பது ஒரு நீண்ட கால தொற்று. நாங்கள் ஏற்கனவே தொழிலாளர் மற்றும் சமூகத்தின் மீது Long COVID பாதிப்பை பார்த்துவருகிறோம். Long COVID போல Long fLU, Long Cold என்று ஏற்படுவதில்லை" என்று அவர் ஏபிசியிடம் கூறினார்.
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும்பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதைஅறிந்துகொள்ள:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரைசெல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.