தொற்றுநோய்பரவலின் போது அறிமுகப்படுத்தப்பட்ட emergency powers-அவசரகால அதிகாரங்களை மாற்றுவதற்கான சட்டமுன்வடிவை, மேற்கு ஆஸ்திரேலியா கீழ் சபையில் நிறைவேற்றியுள்ளது.
The Emergency Management Amendment (Temporary COVID-19 Provisions) Bill 2022 கோவிட்-19 கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து செயல்படுத்த McGowan அரசை அனுமதிக்கும்.
எதிர்க்கட்சிகளால் "கடுமையானது" என்று வர்ணிக்கப்பட்டுள்ள இந்த சட்டமுன்வடிவு, அக்டோபரில் மேல் சபையில் விவாதிக்கப்படும்.
வெள்ளிக்கிழமை, ஆஸ்திரேலியா தனது வாராந்திர கோவிட் எண்ணிக்கையை அறிவித்துள்ளது.
செப்டம்பர் 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தினசரி புதிய கோவிட் நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை 6,543 ஆக காணப்பட்டுள்ளது- இது கடந்த வாரத்தை விட கிட்டத்தட்ட 15 சதவீதம் குறைவு என தரவு காட்டுகிறது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 வாரங்களுக்குப் பிறகும் நோய் அறிகுறிகளை தொடர்ந்து அனுபவிப்பவர்களுக்காக, டாஸ்மேனியா Post COVID-19 Navigation சேவையைத் தொடங்கியுள்ளது.
டாஸ்மேனியர்கள் அரசு நடத்தும் அனைத்து கிளினிக்குகளிலும் PCR பரிசோதனையைப் பெற, நாளை (சனிக்கிழமை) முதல் முன்பதிவு செய்யத்தேவையில்லை. அதற்கு பதிலாக அவர்கள் கிளினிக் திறந்திருக்கும் நேரங்களில் வரலாம்.
ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான புதிய ஓமிக்ரான் திரிபுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் "சில வாரங்களில் கிடைக்கலாம்" என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பூஸ்டர் தடுப்பூசிகள் தற்போது வழங்கப்படவில்லை.
இருப்பினும், குழந்தைகளுக்கு பூஸ்டர் வழங்குவதை அனுமதிப்பது என்ற TGA-சிகிச்சை பொருட்கள் நிர்வாகத்தின் முடிவை, நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு-ATAGI தற்போது மதிப்பாய்வு செய்து வருகிறது.
ஜப்பான், தைவான் மற்றும் ஹாங்காங் ஆகியவை தங்கள் எல்லைகளை மீண்டும் திறக்கும் திட்டங்களை பகிர்ந்து கொண்டன.
சீனா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு மட்டுமே இன்னும் நுழைவுக் கட்டுப்பாடுகள் உள்ளன.
——————————————————————————————
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும்பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதைஅறிந்துகொள்ள:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரைசெல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.