NSW மாநிலத்தில் கோவிட் பரவல் அதிகரிப்பு! புதிதாக 1742 பேருக்கு தொற்று!!

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் 16ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

90% des 16 ans et plus sont totalement vaccinés en Australie.

Source: AAP Image/Bianca De Marchi

  • கோவிட் பரவல் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலியாவில் ஒரே நாளில் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று உச்சம் தொட்டது. 
  • NSW மாநிலத்தில் ஒரே நாளில் பதிவுசெய்யப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று உச்சத்தையடைந்தது. இவர்களில் மூன்றில் ஒரு வீதமானோர் Hunter New England பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்ற பின்னணியில், மக்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டுமென மாநில சுகாதார அமைச்சர் Yvette D'ath வலியுறுத்தினார்.
  • Newcastle-இல் கோவிட் பரவல் ஏற்பட்டுள்ள இடமாக மற்றொரு Pub பட்டியலிடப்பட்டுள்ளதையடுத்து அது மூடப்பட்டுள்ளது.
  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் captain Pat Cummins, கோவிட் தொற்றாளர் ஒருவரின் நெருங்கிய தொடர்பு என உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் Adelaide Test-இல் விளையாடமாட்டார்.
  • நியூசிலாந்து நாட்டில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 90 சதவீதத்தை அடைந்துள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,622 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும்  9 பேர் உயிரிழந்துள்ளனர். 

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,742 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  

ACT- இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 11 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 18 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 16 December 2021 3:18pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends