சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்கும் முடிவு டிசம்பர் 15 வரை ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் குறித்து நவம்பர் மாதம் 30ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Greg Hunt, Karen Andrews and Paul Kelly.

Greg Hunt, Karen Andrews and Paul Kelly. Source: AAP Image/Mick Tsikas

  • வெளிநாட்டு மாணவர்கள், skilled workers, மனிதாபிமான விசாவின்கீழ் உள்வாங்கப்படும் அகதிகள் மற்றும் ஏனைய பிரிவு ஆஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள், முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், ஆஸ்திரேலிய அரசிடமிருந்து travel exemption-விதிவிலக்கு அனுமதி பெறாமலேயே டிசம்பர் 1ம் திகதி தொடக்கம் இங்கு  வரமுடியும்  என  அறிவிக்கப்பட்டிருந்தநிலையில்  இந்நடவடிக்கையை மேலும் இரு வாரங்களுக்கு அதாவது டிசம்பர் 15 வரை பிற்போடுவதாக அரசு தெரிவித்துள்ளது.
  • மருத்துவ ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டே எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அமையும் என சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்தார். 
  • சர்வதேச எல்லைகளை மீண்டும் திறப்பதை ஒத்திவைப்பது என்ற அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
  • புதிய Omicron  திரிபு சமூகத்தில் பரவுவது தவிர்க்கப்பட முடியாத ஒன்று என துணை தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ள பின்னணியில், இப்புதிய திரிபின் தாக்கத்தை எதிர்கொள்வது தொடர்பில், இன்று தேசிய அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
  • ஆஸ்திரேலியாவில் Omicron தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.
  • மேற்கு ஆஸ்திரேலியாவில் பல தொழில்துறைகளுக்கு வழங்கப்பட்ட கட்டாய தடுப்பூசிக்கான காலக்கெடு நெருங்குகிறது.
  • அதிக ஆபத்துள்ள துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டுமென்ற நடைமுறை டிசம்பர் 17 முதல் குயின்ஸ்லாந்தில்  நடைமுறைக்கு வருகிறது. 

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 918 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 6  பேர் உயிரிழந்துள்ளனர். 

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 179 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 3  பேர் உயிரிழந்துள்ளனர்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 30 November 2021 3:00pm
Updated 30 November 2021 3:02pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends