மனிதாபிமான அடிப்படையில் உள்வாங்கப்படும் அகதிகளும் டிசம்பர் 1 முதல் ஆஸ்திரேலியா வரலாம்!

கொரோனா வைரஸ் குறித்து நவம்பர் மாதம் 22ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Wasafiri kutoka ndege ya Singapore, wawasili katika uwanja wakimataifa wa Melbourne, Jumapili, Novemba 21, 2021

Wasafiri kutoka ndege ya Singapore, wawasili katika uwanja wakimataifa wa Melbourne, Jumapili, Novemba 21, 2021 Source: AAP

ஆஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள், முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், டிசம்பர் 1ம் திகதி தொடக்கம்,  ஆஸ்திரேலிய அரசிடமிருந்து travel exemption-விதிவிலக்கு அனுமதி பெறாமலேயே இங்கு வரமுடியும்.

வெளிநாட்டு மாணவர்கள், skilled workers, temporary working holidaymakers, மனிதாபிமான விசாவின்கீழ் உள்வாங்கப்படும் அகதிகள் மற்றும் ஏனைய பிரிவு ஆஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள், முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், விதிவிலக்கு அனுமதி பெறாமலேயே இங்கு வரமுடியும். இவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன் விமானப்பயணம் மேற்கொள்வதற்கு 72 மணித்தியாலங்களுக்குள் கோவிட் சோதனையை மேற்கொண்டு, தமக்கு தொற்று இல்லையென்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜப்பான் மற்றும் தென்கொரிய நாட்டவர்களும் டிசம்பர் 1 முதல்,  travel exemption-விதிவிலக்கு அனுமதி பெறாமலேயே  ஆஸ்திரேலியாவுக்கு பயணம்செய்யமுடியும்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,029 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 180 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

NT-இல் புதிதாக இருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. Katherine பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை, 24 நவம்பர் புதன்கிழமை மாலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 22 November 2021 4:02pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends