நாட்டில் முதலாவது சுற்று கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 90 சதவீதத்தை கடந்தது!

கொரோனா வைரஸ் குறித்து நவம்பர் மாதம் 12ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Surfers Paradise

Higher vaccination rate in the country would mean greater freedoms. Source: AAP Image/Jono Searle

  • ஆஸ்திரேலியாவில்  முதலாவது சுற்று கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை நேற்றையதினம் 90 சதவீதத்தை தாண்டியது.
  • விக்டோரியா மாநிலத்தின் பெருந்தொற்றுக்கால சட்டங்கள் தொடர்பில் பெடரல் அரசு தலையிடாது என பிரதமர் Scott Morrison தெரிவித்துள்ளார்.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தின் schoolies வாரத்தை ரத்துச் செய்ய விரும்பவில்லை எனவும், ஆனால் தொடர்புபடுத்தப்பட முடியாத நிலையில் கோவிட் தொற்றுக்கள் பதிவானால் கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும் எனவும் Premier Annastacia Palaszczuk கூறியுள்ளார்.
  • டாஸ்மேனிய மாநிலத்தில் ஒன்றுகூடல்கள் மற்றும் இசை நடன விழாக்கள் மீதான கட்டுப்பாடுகளை, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தளர்த்துவது தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டுவரும் பின்னணியில், மாநிலத்திலுள்ள 16-24 வயதிற்குட்பட்டவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. 
  • நாட்டில் குறைந்தளவில் தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட பூர்வீக குடி சமூகங்களின் தலைவர்களிடம், மேற்கு ஆஸ்திரேலியாவின் vaccine commissioner Chris Dawson,  தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
  • நவம்பர் 15 முதல், சிட்னி பெருநகரில் உள்ள நோயாளிகளுக்கான elective surgery நடவடிக்கைகள், முழு திறனுடன் செயற்படும். 

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,115 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 286 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக இருவருக்குத்  தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

ACT-இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 15 பேருக்குத்  தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 12 November 2021 1:31pm
Updated 12 November 2021 1:54pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends