விக்டோரியாவில் 13 பேர், குயின்ஸ்லாந்தில் 22 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 47 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 95 இறப்புகள் பதிவாகியுள்ளன.
2020 ஜனவரியில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து ஆஸ்திரேலியாவில் கோவிட் காரணமாக 11,959 பேர் இறந்துள்ளதாக தரவு காட்டுகிறது. விரைவில் இந்த எண்ணிக்கை 12,000ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக நாட்டின் சில மாநிலங்களில் புதிய கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இம்மாநிலங்களில் தற்போதைய ஓமிக்ரான் அலை உச்சத்தை எட்டியிருப்பதற்கான ஆரம்ப அறிகுறியாக இது கருதப்படுகிறது.
இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு செல்லப்படுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. செவ்வாயன்று, 76 பேர் கோவிட்-19 தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக NSW தெரிவித்துள்ளது - இது ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பதிவான அதிகூடிய எண்ணிக்கையாகும்.
ஆராய்ச்சித் தரவுகளை மேற்கோள் காட்டியுள்ள குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk, தனது மாநிலத்தில் மூன்றாவது /தற்போதைய ஓமிக்ரான் அலை ஆகஸ்ட் மாத இறுதியில் உச்சத்தை அடையலாம் என குறிப்பிட்டுள்ளார். அங்கு கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
விக்டோரியாவில் ஓமிக்ரான் அலை கடந்த வாரம் உச்சத்தை எட்டியிருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் நம்புகிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் Operation COVID Shield நடவடிக்கை ஆகஸ்ட் 1 அன்று முடிவுக்கு வந்தது. தடுப்பூசி விநியோகம் தொடர்பில் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், கொரோனா வைரஸுக்கு எதிராக ஆஸ்திரேலியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவும் இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.
பிரதமர் Anthony Albanese வியாழன் அன்று தேசிய அமைச்சரவையின் மெய்நிகர் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Long COVID விளைவுகளைக் கையாள்வதற்கான தேசிய திட்டத்தை ஆஸ்திரேலியா விரைவில் உருவாக்க முடியும் எனவும் அரசு தற்போது நிபுணர்களின் ஆலோசனையை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சர் Mark Butler நாடாளுமன்றத்தில் கூறினார்.
கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில் சுமார் நான்கு சதவீதம் பேர் Long COVID அறிகுறிகளை அனுபவிப்பதாக Mark Butler கூறினார்.
முதியோர்களுக்கு கூடுதல் ஊனமுற்றோர் ஆதரவை(DSOA) ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 1 2022க்குப் பிறகு கோவிட்-19 ஆல் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பில் DSOA திட்டம் பரிசீலிக்கும் என குறிப்பிடப்படுகிறது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 10,702 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 47 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 10,079 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 13 பேர் மரணமடைந்தனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 6,249 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 22 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 3,821 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐவர் மரணமடைந்தனர்
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,848 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவர் மரணமடைந்தனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 944 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்
ACT- இல் புதிதாக 754 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நால்வர் மரணமடைந்தனர்.
NT-இல் 242 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.