Latest

COVID-19 pandemic leave கொடுப்பனவு நீட்டிக்கப்படுகிறது

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 14ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

AUSTRALIA CORONAVIRUS COVID-19

People shop at the Queen Victoria Market. (file) Source: AAP / SCOTT BARBOUR/AAPIMAGE

கோவிட்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்படுவோருக்கான COVID-19 pandemic leave கொடுப்பனவுகள் செப்டம்பர் 30 க்குப் பின்னரும் தொடரும் என்று பிரதமர் Anthony Albanese கூறினார்.

மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் வரை, அவசரகால கொடுப்பனவுகள் தொடரும் என்று அவர் கூறினார்.

இதன்படி கோவிட் தொற்றுக்குள்ளான ஒருவருக்கு அவரது பணியிடத்தில் சம்பளத்துடனான நோய்விடுப்பு இல்லாதபட்சத்தில், அவர் அரசு வழங்கும் 540 டொலர்கள் வரையான கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

COVID-19 pandemic leave கொடுப்பனவுத் திட்டம் இம்மாதம் 30ம் திகதியுடன் முடிவடையவிருந்த நிலையில், இக்கொடுப்பனவு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து COVID-19 pandemic leave கொடுப்பனவுகளுக்கென $2.2 பில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.
சமீபத்திய ஓமிக்ரான் அலை மற்றும் Flu பரவல் மத்தியிலும் ஜூன் காலாண்டில், பொது மருத்துவமனைகள் உயர்தர சிகிச்சையை வழங்கியதாக NSW health தெரிவித்துள்ளது.

Bupa வாடிக்கையாளர்கள் அடுத்த மாதம் ஒரு policyக்கு $340 என்ற அடிப்படையில் பணத்தொகையை பெறவுள்ளனர்.

Bupa நிறுவனம் அதன் தொற்றுநோய்க்கால சேமிப்பின் ஒரு பகுதியாக பணத்தை திருப்பித் தருகிறது.

மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் நவம்பர் 1ம் தேதி தமது premiums-ஐ உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
——————————————————————————————

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும்பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதைஅறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரைசெல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
——————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 14 September 2022 5:29pm
Updated 14 September 2022 5:34pm
Source: SBS


Share this with family and friends