Latest

ஐந்து வயதுக்குட்பட்ட குறிப்பிட்ட தொகுதி குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க அனுமதி

கொரோனா வைரஸ் குறித்து ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Children Under 5 Receive Covid-19 Vaccines At University Of Washington Hospital

On Wednesday, Australia followed the US and Canada in rolling out the COVID-19 vaccines for children under five years. Source: Getty / David Ryder

ஆஸ்திரேலியாவிலுள்ள ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளில் குறிப்பிட்ட தொகுதியினருக்கு Moderna கோவிட்-19 தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்துள்ளது.

கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடு, இயலாமை மற்றும் சிக்கலான மற்றும் பல சுகாதார நிலைமைகள் உள்ள சுமார் 70,000 குழந்தைகள் செப்டம்பர் 5 முதல் இத்தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சர் Mark Butler கூறினார்.

தடுப்பூசியின் இரண்டு சுற்றுக்களையும் எட்டு வார இடைவெளியில் போட்டுக்கொள்ளலாம் என்று Mark Butler கூறினார். சில குழந்தைகள் மூன்றாவது சுற்றுக்கும் தகுதியுடையவர்களாக இருக்கலாம்.

"அதிக ஆபத்தில் இல்லாத 6 மாதங்கள் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசியை ATAGI தற்போது பரிந்துரைக்கவில்லை. இந்த வயதினருக்கு தடுப்பூசி வழங்குவதன் நன்மைகள் தொடர்பில் ATAGI தொடர்ந்து கண்காணிக்கும்" என Mark Butler கூறினார்.

குழந்தைகளுக்கான இத்தடுப்பூசி மாநில மற்றும் பிராந்திய மருத்துவமனைகள் மூலம் நிர்வகிக்கப்படும். General practitioners மூலம் தடுப்பூசிகளை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் முன்பதிவு தொடங்கும் என்றும், உடனடியாக தடுப்பூசி வழங்குநர்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் பெற்றோர்களை அமைச்சர் Mark Butler கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கோவிட் தடுப்பூசிக்கு அமெரிக்கா, கனடா மற்றும் சில ஆசிய நாடுகள் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளன.

விக்டோரியாவில் 6 பேர், குயின்ஸ்லாந்தில் 6 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 39 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 66 இறப்புகள் பதிவாகியுள்ளன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 16,648 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 39 பேர் மரணமடைந்தனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 9,122 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 6,399 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,062 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,860 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 892 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவர் மரணமடைந்தனர்.

ACT- இல் புதிதாக 889 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

NT-இல் 366 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 3 August 2022 3:21pm
Updated 3 August 2022 3:46pm
Source: SBS


Share this with family and friends