NSW மாநிலத்தில் கோவிட் பரவல் உச்சம்! ஒரே நாளில் 3,057 பேருக்கு தொற்று!!

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் 21ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

eople are seen at a Cohealth pop-up vaccination clinic at the State Library Victoria

States say they will utilise the extraordinary cabinet meeting to urge Commonwealth to shorten booster time intervals. Source: AAP

  • ஆஸ்திரேலிய அமைச்சரவைக் கூட்டம் திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே நடைபெறவுள்ள நிலையில், booster தடுப்பூசிக்கான கால இடைவெளியை மேலும் குறைக்கலாமா என ஆராயப்பட்டுவருவதாக பிரதமர் Scott Morrison தெரிவித்துள்ளார்.
  • தொற்றுநோய்ப்பரவலைத் தடுப்பதற்கு உதவும் வகையில் booster தடுப்பூசிக்கான கால இடைவெளியைக் குறைக்குமாறு சில மாநிலத் தலைவர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.
  • NSW மாநிலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதைத் தொடர்ந்து, தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு மாநில சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Omicron திரிபின் ஆதிக்கமே அதிகளவில் உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோவிட் தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால் 7 நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.
  • Omicron அச்சுறுத்தல் காரணமாக எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் திட்டத்தை பெப்ரவரி வரை நியூசிலாந்து ஒத்திவைத்துள்ளது. 

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,245 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.

New South Wales மாநிலத்தில் புதிதாக 3,057 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இருவர்  மரணமடைந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் புதிதாக 154 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

NT-இல் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

ACT- இல் புதிதாக 16 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 86 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 21 December 2021 2:30pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends