விக்டோரியாவில் 34 பேர், குயின்ஸ்லாந்தில் 8 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 29 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 82 இறப்புகள் பதிவாகியுள்ளன.
12-15 வயதுடைய அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி பரிந்துரைக்கப்படவில்லை என்று நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இரு சுற்று தடுப்பூசிகளை மட்டும் பெற்றுக்கொண்ட இந்த வயதிற்குட்பட்ட ஆரோக்கியமானவர்களிடையே, கோவிட் காரணமாக அதிக பாதிப்பு ஏற்பட்டதற்கான போதுமான சான்றுகள் இல்லை என ATAGI சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும் கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மற்றும் குறிப்பிடத்தக்க அல்லது விசேட தேவைகளுடையவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி கிடைக்கிறது.
உண்மையான கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, ஏற்கனவே பதிவான எண்ணிக்கையை விட இரு மடங்காக இருக்கலாம் என்று சுகாதார அமைச்சர் Mark Butler ஏபிசி வானொலியிடம் கூறினார்.
மேலும் மூன்றாவது சுற்று தடுப்பூசியை(booster) இதுவரை பலர் பெற்றுக்கொள்ளாததையிட்டு தான் கவலைப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இரண்டாவது சுற்று தடுப்பூசியைப் பெற்று ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டநிலையில், சுமார் ஐந்து மில்லியன் பேர் இன்னமும் மூன்றாவது சுற்று தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டார்.
வைரஸ் பரவல் முடிந்துவிடவில்லை என வலியுறுத்தியுள்ள அமைச்சர் Mark Butler, கோவிட் தொற்றுக் கண்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை நீக்குவது அல்லது குறைப்பது குறித்து தலைமை சுகாதார அதிகாரி அல்லது பிற நிபுணர்களிடமிருந்து எந்த ஆலோசனையும் தனக்கு கிடைக்கவில்லை என கூறினார்.
புதிய துணை திரிபுகளைக் கண்டறியக்கூடிய RAT Kit-களின் பட்டியலை TGA புதுப்பித்துள்ளது.
அமெரிக்காவில் 6,600 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, குரங்கம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்தது 58 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் நேற்றையதினம் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார்.
அனைத்து டாஸ்மேனியர்களும் ஆகஸ்ட் 31 வரை இலவச Flu தடுப்பூசியைப் பெறலாம்.
தெற்கு ஆஸ்திரேலியர்கள் தங்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை, சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை, Aldinga Beach Primary School, Greenwith Primary School, Flagstaff Hill Primary School, John Hartley School B-6 மற்றும் Glen Osmond Primary School ஆகியவற்றில் பெறலாம்.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 12,908 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 29 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 7,502 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 34 பேர் மரணமடைந்தனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 4,926 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 8 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 3,239 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,421 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 8 பேர் மரணமடைந்தனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 765 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.
ACT- இல் புதிதாக 705 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
NT-இல் 257 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.