NSW மற்றும் விக்டோரியாவில் ஒரே நாளில் 24 பேர் கோவிட் தொற்று காரணமாக மரணம்!

கொரோனா வைரஸ் குறித்து ஜனவரி மாதம் 11ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Paramedics are seen tending to their ambulance outside St. Vincent hospital in Melbourne, Tuesday, January 11, 2022.

Paramedics are seen tending to their ambulance outside St. Vincent hospital in Melbourne, Tuesday, January 11, 2022. Source: AAP

  • விக்டோரியா மாநிலத்தில் 37,994 பேருக்கும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 25,870 பேருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • இவ்விரு மாநிலங்களில் மட்டும் கோவிட் தொடர்பான 24 மரணங்கள் ஒரே நாளில் பதிவாகின.
  • விக்டோரிய மாநிலத்தில் 861 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 117 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். 27 பேர் ventilator-களில் உள்ளனர்.
  • திங்களன்று 56 மாநில சோதனை கிளினிக்குகளில் சுமார் 34,000 இலவச rapid antigen test kits வழங்கப்பட்டதாக விக்டோரிய Premier Daniel Andrews தெரிவித்தார்.
  • வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள அல்லது நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களாக இனங்காணப்பட்டுள்ள 3,992 மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் 422 ஆம்புலன்ஸ் விக்டோரியா ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கமுடியாத நிலையில் உள்ளதாக Daniel Andrews தெரிவித்தார்.
  • பள்ளிநேரம் முடிவடைந்தபின்னர் அங்கு சென்று தடுப்பூசி வழங்குவதற்கென GPக்கள் மற்றும் சமூக மருந்தகங்களுக்கான  4 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டுத் திட்டத்தையும் Daniel Andrews அறிவித்தார்.
  • நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2186 ஆக அதிகரித்துள்ளது. 170 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.
  • குயின்ஸ்லாந்தில் 502 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 27 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். 
  • சிட்னி விலவூட் குடிவரவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 6 பேருக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  • கோவிட் பரவலொன்றைக் கையாள்வதற்கான தயார் நிலையுடன் விலவூட் தடுப்புமுகாம் இல்லையெனத் தெரிவித்துள்ள அகதிகள் செயற்பாட்டர்கள், இதுதொடர்பில் விசனம் வெளியிட்டுள்ளனர்.
  • Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை Service NSW app-இல் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படவுள்ளது. ஏனைய சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் இதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக 25,870 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 பேர் மரணமடைந்தனர். Antigen சோதனை முடிவுகள் சேர்க்கப்படவில்லை. 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 37,994 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  13  பேர்  மரணமடைந்தனர். Antigen சோதனை முடிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 1,379 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 20,566 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  ஒருவர் மரணமடைந்தார். Antigen சோதனை முடிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 11 January 2022 2:30pm
Updated 11 January 2022 2:33pm


Share this with family and friends