Close Contacts-க்கான தனிமைப்படுத்தல் விதி மேலும் சில மாநிலங்களில் தளர்த்தப்படுகிறது!

கொரோனா வைரஸ் குறித்து ஏப்ரல் மாதம் 28ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Tasmania has become the final Australian state to drop close contact rules.

Tasmania has become the final Australian state to drop close contact rules. (file) Source: Leisa Tyler/LightRocket via Getty Images

NSW, விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, NT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 50 இறப்புகள் பதிவாகியுள்ளன.

உலகளவில் புதிய கோவிட் தொற்றுகள் மற்றும் இறப்புகள் குறைந்து வரும் பின்னணியில், தொடர்ந்தும் நிலைமையைக் கண்காணிக்குமாறு WHO-உலக சுகாதார அமைப்பு, நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த வாரம் 15,000 க்கும் மேற்பட்ட கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், மார்ச் 2020 க்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த வாராந்திர எண்ணிக்கை இதுவெனவும் WHO இன் director-general Dr Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள்-close contacts-க்கான கட்டுப்பாட்டுத் தளர்வு 02 மே திங்கட்கிழமை நள்ளிரவு 12.01 முதல் நடைமுறைப்படுத்தப்படு முதல் டஸ்மேனியா அறிவித்துள்ளது. இதன்படி close contacts தம்மை ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை.

அவர்கள் தங்கள் வீட்டிலுள்ளவர்களைத் தவிர வேறு யாரையும் சந்திப்பதற்கு முன், தினசரி RAT சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்கள், மருத்துவமனைகள், மற்றும் சீர்திருத்த யைங்களுக்குச் செல்ல முடியாது.

Close contacts தங்கள் வீடுகளுக்கு வெளியே, உள்ளரங்குகளில் முகக்கவசம் அணிய வேண்டும். RAT அல்லது PCR இல் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் close contacts-க்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டு தளர்வு ஏப்ரல் 30 சனிக்கிழமை நள்ளிரவு 12.01 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 28 April 2022 2:36pm
Updated 28 April 2022 3:27pm


Share this with family and friends