2020-21இல் 3.4 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் மனநல உதவியை நாடியுள்ளனர்!

கொரோனா வைரஸ் குறித்து ஜுலை மாதம் 22ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Pedestrians wearing face masks in Melbourne, Monday.

Pedestrians wearing face masks in Melbourne. Source: AAP Image/Joel Carrett

விக்டோரியாவில் 25 பேர், குயின்ஸ்லாந்தில் 10 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 15 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 63 இறப்புகள் பதிவாகியுள்ளன. 

வெள்ளிக்கிழமையன்று ஆஸ்திரேலிய புள்ளியியல் திணைக்களம் வெளியிட்டுள்ள  தரவுகளின்படி,  2020-21இல் ஐந்தில் ஒரு ஆஸ்திரேலியர் (அல்லது 4.2 மில்லியன் பேர்) மனநல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

4.2 மில்லியன் பேரில், 3.3 மில்லியன் பேர் துன்பம் அல்லது பதட்டம் போன்ற உணர்வுகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

2020-21 ஆம் ஆண்டில் 3.4 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் தங்கள் மன ஆரோக்கியத்திற்காக ஒரு சுகாதார நிபுணரிடம் உதவி கோரியுள்ளனர் என்று ஆய்வு காட்டுகிறது.

COVID-19 antiviral மாத்திரை தொடர்பிலான ஒரு புதிய விளம்பர பிரச்சாரத்தை ஆஸ்திரேலிய அரசு இன்றையதினம் தொடங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட நான்கு தடுப்பூசிகளையும் பைடன் பெற்றுள்ளார். அவர் தற்போது "இலேசான அறிகுறிகளை" கொண்டிருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது

தற்போதைய Omicron அலை குறையும் வரை தமது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்களின் கவுன்சில்-ACTU செயலாளர் Sally McManus பணியிடங்களை வலியுறுத்தியுள்ளார்.

மனநல உதவி 24 மணிநேரமும் ஏழு நாட்களும் கிடைக்கிறது:

Lifeline: 13 11 14 

Suicide Call Back Service: 1300 659 467 

Beyond Blue: 1300 224 636

MensLine Australia: 1300 789 978

Kids Helpline: 1800 551 800

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  18,669 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 15 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 12,278  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 25 பேர் மரணமடைந்தனர். 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 9,023 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 6,056 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  ஒருவர்  மரணமடைந்தார்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,374  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  7 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 1416 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.

ACT- இல் புதிதாக  891 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  ஒருவர்  மரணமடைந்தார்

NT- இல் புதிதாக  523 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 22 July 2022 4:00pm
Updated 22 July 2022 4:12pm


Share this with family and friends