கொரோனா வைரஸ் தொடர்பிலான பிந்திய தகவல்களை உங்கள் மொழியில் பெற்றுக்கொள்ள
ஆஸ்திரேலியாவில் COVID-19 தடுப்பு மருந்துகள்
அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள COVID-19 தடுப்பூசிகளை வழங்க ஆஸ்திரேலிய அரசு உறுதியளித்துள்ளது.
நீங்கள் ஒரு COVID-19 தடுப்பூசியை பெற முடியுமா மற்றும் எங்கு முன்பதிவு செய்யலாம் என்பதை அறிய

COVID-19 vaccine national roll-out strategy Source: Australian Government - Department of Health
நீங்கள் 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால் தடுப்பூசி போட தகுதியுடையவர். 16 முதல் 39 வயதுக்குட்பட்ட சிலர் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்களாக இருக்கலாம்.
தடுப்பூசிக்கான உங்கள் தகுதியை சரிபார்க்க இந்த வலைத்தளத்தின் படிகளைப் பின்பற்றவும்:
உங்கள் ஜி.பியுடன் ஒரு சந்திப்பை மேற்கொள்ளலாம். அத்துடன் உங்கள் மொழியில் தடுப்பூசி பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள :
பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகள் யாவை?
The Australian Technical Advisory Group on Immunisation [ATAGI] 16 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு விருப்பமான தடுப்பூசியாக COVID-19 Comirnaty (Pfizer) தடுப்பூசியை பரிந்துரைக்கிறது.
COVID-19 தடுப்பூசி AstraZeneca 18 முதல் 59 வயதுடையவர்களுக்கும் வழங்கப்படலாம்.
16 வயதிற்கு உட்பட்டவர்கள் இன்னும் ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போட தகுதியற்றவர்கள்.
நீங்கள் இன்னும் தகுதி பெறவில்லை, மற்றும் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்றால், நீங்கள் தகுதி பெறும்போது அறிவிக்குமாறு கோரலாம்.
என்னென்ன மனநல உதவிகள் கிடைக்கின்றன?
ஆஸ்திரேலிய அரசாங்கம் கோவிட் 19 பரவலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்கவென ஆரம்பித்துள்ளது. இது ஆஸ்திரேலியர்களினதும் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கொரோனா அலைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கென 10 Medicare subsidised psychological therapy sessions-ஐ ஊடாக அரசாங்கம் வழங்குகிறது.
கொரோனா வைரஸ் பரவலின்போது மற்றும் சுய-தனிமைப்படுத்தலின் போது நல்ல மன ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் கோவிட் -19 தொடர்பான மனநல ஆதரவை "" மூலம் வழங்கியுள்ளது.
உங்கள் மொழியில் உங்களுக்கு மனநல ஆதரவு தேவைப்பட்டால், 131 450 இல் TIS நேஷனலை அழைக்கவும் அல்லது ஒரு மொழிபெயர்ப்பாளரைப் பெற ஐப் பார்வையிடவும். TIS நேஷனல் 100 க்கும் மேற்பட்ட மொழிகளை உள்ளடக்கியது மற்றும் 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் கிடைக்கிறது.
என்பது Mental Health ஆஸ்திரேலியாவால் நடத்தப்படும் ஒரு திட்டமாகும், இது கலாச்சார ரீதியாகவும் மொழியியல் ரீதியாகவும் மாறுபட்ட (CALD) பின்னணியைச் சேர்ந்தவர்களின் மன ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டது, கலாச்சார ரீதியாக அணுகக்கூடிய வடிவத்தில் வளங்கள், சேவைகள் மற்றும் தகவல்களை வழங்குகிறது.
மனநல சுகாதார சேவைகளைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு பார்வையிடவும்.
நிதி சிக்கல்கள்( Pandemic Leave Disaster Payment)
ஆஸ்திரேலிய அரசு paid pandemic leave-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
சுய-தனிமைப்படுத்தப்பட வேண்டிய தொழிலாளர்களுக்கு இது பொருந்தும். நீங்கள் நிதி சிக்கல்களை எதிர்கொண்டால், க்குச் செல்லுங்கள் அல்லது 1800 007 007 என்ற எண்ணில் தேசிய கடன் உதவி எண்ணை அழைக்கவும்.
மேலதிகமாக அறிந்துகொள்ள:
https://www.servicesaustralia.gov.au/individuals/services/centrelink/pandemic-leave-disaster-payment
ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதேசத்திலும் நடைமுறையிலுள்ள விவரத்தைக் காண பின்வரும் இணைப்புக்களுக்குச் செல்லவும்
COVID-19 தொற்று எவ்வாறு பரவுகிறது?
COVID-19 ஒரு நபரிலிருந்து மற்றொரு நபருக்கு கீழ்க்காணும் செயற்பாடுகளினூடாக பரவுகின்றது.
- இந்நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவருடன் அல்லது அந்த நபருக்கு தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு அவருடன் நெருக்கமான தொடர்பில் இருத்தல்.
- நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இருமிக்கொண்டும் தும்மிக்கொண்டும் இருக்கும் நபருடன் நெருங்கிய தொடர்பில் இருத்தல்.
- நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவர் இருமும்போதும் தும்மும்போதும் வெளியேறும் சிறுதுளிகள் மேசை அல்லது கதவுகைபிடிகள் போன்ற மேற்பரப்புக்களில் படிந்திருக்கும். நீங்கள் அவற்றைத் தொட்டுவிட்டு பின் உங்களது வாயையோ முகத்தையோ தொடுதல்.
ஆஸ்திரேலிய அரசு COVIDSafe செயலியை அனைவரையும் தரவிறக்கிக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. மேலதிகமாக அறிந்துகொள்ள செல்லுங்கள்.
தும்மும்போதும் இருமும்போதும் கைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் மற்றவர்களிடமிருந்து இடைவெளியொன்றைப் பேணுவதன்மூலமும் பெரும்பாலான வைரசுக்களிலிருந்து தப்பிக்கலாம்.
- சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்.
- உங்கள் கைகளை சோப்பு பயன்படுத்தி தண்ணீரில் அடிக்கடி கழுவுங்கள்.
- இருமும்போதும் தும்மும்போதும் tissue ஒன்றைப் பயன்படுத்திவிட்டு அதனை குப்பைத்தொட்டிககுள் வீசுங்கள். alcohol-based hand sanitiser-ஐ பயன்படுத்துங்கள்.
- உங்களுக்கு உடல்நலமில்லை என்றால் மற்றவர்களிடமிருந்து தள்ளியிருங்கள்.(1.5 மீட்டர் இடைவெளியைப் பேணுங்கள்)
- முடிந்தவரை எங்கும் செல்லாமல் வீட்டிலேயே தங்கியிருங்கள்.
COVID-19 ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எவை?
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது.
Flu மற்றும் cold ஏற்படுவதுபோன்ற அறிகுறிகளையொத்த கீழ்க்காணும் அறிகுறிகள் காணப்படும்.
- காய்ச்சல்
- சுவாச கோளாறு
- இருமல்
- தொண்டை நோவு
- மூச்சுத் திணறல்
- பிற அறிகுறிகள்- மூக்கு ஒழுகுதல், தலைவலி, தசை அல்லது மூட்டு வலிகள், குமட்டல், வயிற்றுப்போக்கு, வாந்தி, வாசனை உணர்வு இழப்பு, சுவை மாற்றம், பசியின்மை மற்றும் சோர்வு.
இவ்வறிகுறிகள் தோன்றினால் கோவிட் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு இருக்கும் அறிகுறிகள் தொடர்பில் எவரிடமேனும் பேசவேண்டுமெனில் 24x7 இயங்கும் 1800 020 080 என்ற தேசிய கொரோனாவைரஸ் உதவி இலக்கத்தை அழையுங்கள்.
உங்களுக்கு மூச்செடுப்பதில் சிரமம் இருந்தாலோ அல்லது மருத்துவ அவசரநிலை ஏற்பட்டாலோ 000-ஐ அழையுங்கள்.
COVID-19 தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது?
இத்தொற்று ஏற்பட்ட சிலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படாமலே போகலாம். இன்னும் சிலருக்கு இலேசான அறிகுறிகள் மாத்திரம் ஏற்பட்டு விரைவில் குணமடையலாம். மற்றவர்கள் மிகக்கடுமையாக விரைவாக நோய்வாய்ப்படலாம். ஏனைய கொரோனா வைரஸ் தொற்று அனுபவங்களின்படி தொற்று ஏற்படக்கூடிய அதிக ஆபத்து கீழ்க்காணும் பிரிவினருக்கு உள்ளது.
- கடுமையான வியாதிக்குட்பட்டவர்கள்/நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்கள்
- 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்
- 50 வயதுக்கு மேற்பட்ட பூர்வகுடி மற்றும் டொரஸ் ஸ்ரெயிட் தீவு மக்கள்
- 65 வயதுக்கு மேற்பட்ட நீண்டநாட்கள் நோய்வாய்ப்பட்டிருப்போர்
நீங்கள் எங்கு சோதனை செய்யலாம்?
ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்தியத்திலும் சோதனை கிளினிக்குகளைக் கண்டுபிடிக்க பின்வரும் இணைப்புக்களுக்குச் செல்லவும்
உங்களுக்கு COVID-19 தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் நீங்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
- வேலையிடம், பள்ளி, வணிக வளாகங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகம் என பொது இடங்கள் எவற்றுக்கும் செல்லக்கூடாது.
- உங்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை முன் கதவருகில் கொண்டுவந்துவைக்குமாறு யாரிடமேனும் கேட்கலாம்.
- வெளியாட்களை வீட்டினுள் அனுமதிக்க வேண்டாம். உங்கள் வீட்டில் வழக்கமாக இருப்பவர்கள் மாத்திரமே அங்கு தங்கலாம்.
நான் முகக்கவசம் அணிய வேண்டுமா?
COVID-19 தொற்று ஏற்பட்ட ஒருவர் முகக்கவசம் அணிந்து கொள்வதன் மூலம் ஏனையவர்களுக்கு அத்தொற்று பரவுவதிலிருந்து பாதுகாக்கலாம்.
ஆஸ்திரேலியாவில் COVID-19 சமூக பரவல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக சில மாநிலங்களும் பிராந்தியங்களும் இப்போது முககக்கவசங்களைப் பரிந்துரைக்கின்றன.
உங்கள் மாநிலத்தில் அல்லது பிராந்தியத்தில் சூழ்நிலைகள் மாறினால், முகக்கவசம் குறித்த ஆலோசனை மாற்றமடையும். உங்கள் மாநில அல்லது பிராந்திய அரசு இது குறித்த ஆலோசனைகளை வழங்கும்.
ஆஸ்திரேலியாவிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு மற்றும் ஆஸ்திரேலியாவிற்குள் பயணம் செய்தல்
ஆஸ்திரேலியாவிலுள்ள மாநிலங்களும் பிராந்தியங்களும் தமது எல்லைகளை மூடுதல் உட்பட தமக்கேற்றவாறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தமுடியும்.
ஆஸ்திரேலிய உள்ளூர் விமானங்களில் பயணிப்பவர்களது பெயர், முகவரி, மின்னஞ்சல், தொடர்பிலக்கம், அவர் பயணிக்கும் இடம் மற்றும் தங்கவுள்ள முகவரி ஆகிய விவரங்கள் அக்டோபர் முதலாம் திகதி முதல் குறிப்பிட்ட விமானசேவைகளினால் சேகரிக்கப்பட்டு சுகாதார சேவையினரிடம் வழங்கப்படுகிறது.
பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள்
நாடுமுழுவதும் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் சமூக இடைவெளியை இறுக்கமாக கடைப்பிடிப்பது அவசியமாகும். உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பொதுப்போக்குவரத்தில் பயணம்செய்வதை தவிருங்கள்.
பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள:
சர்வதேச பயணிகள்
ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களும் அவர்களுடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் மாத்திரமே ஆஸ்திரேலியாவுக்குள் வரமுடியும்.
சர்வதேச விமானப்பயணத்திற்கான தற்காலிக நடவடிக்கைகள் அரசாங்கத்தால் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. மேலதிக விபரங்களுக்கு:
ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிவரும் பயணிகள் தொடர்பிலான தனிமைப்படுத்தல் மற்றும் சோதனை நடவடிக்கைகள் மாநில மற்றும் பிராந்திய அரசாங்கங்களால் நிர்வகிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன:
- NSW and
- VIC , and
- ACT and
- NT and
- QLD and
- SA and
- TAS and
- WA and
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டுப்பயணம் மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில விதிவிலக்குகள் உண்டு.
- கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான ஆராய்ச்சி மற்றும் உதவிப்பணிகளுக்குச் செல்லுதல்
- தவிர்க்க இயலாத ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் தொடர்பிலான பயணம்
- ஆஸ்திரேலியாவில் கிடைக்காத அவசர மருத்து சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள
- தவிர்க்க இயலாத தனிப்பட்ட காரணங்களுக்காக செல்லுதல்
- கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான பயணம்
- தேசிய நலன் கருதிய பயணம்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன
ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் குறித்த மேலதிக விபரங்களைப்பெற : , , , , , , ,