Latest

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நகரங்களில் காட்டுத்தீ அபாயம் அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்த பிந்திய தகவல்கள்.

VICTORIAN EMERGENCY MANAGEMENT TRAINING CENTRE

Supplied image of firefighters at the $109 million Victorian Emergency Management Training Centre in Craigieburn, Melbourne, Thursday, September 9, 2022. Credit: FIRE RESCUE VICTORIA/PR IMAGE

குயின்ஸ்லாந்தில் இந்த வாரம் பரவலான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்படலாம் என்றும் hail- க்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியது.

இதேவேளை நியூ சவுத் வேல்ஸில் உள்ள பல சமூகங்களை பெரும் வெள்ளம் தொடர்ந்து பாதிக்கிறது.

பல நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா ஆறுகளில் சிறியது முதல் மிதமான வெள்ளம் தொடர்ந்து வருகிறது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் Riverlandடில், மேல் மற்றும் கீழ் Murray ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், அவசரநிலை தொடர்கிறது.
மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா, குயின்ஸ்லாந்து மற்றும் NSW உள்ளூர் பகுதிகளில் வெள்ளம் மற்றும் மழைப்பொழிவு தொடர்வதன் காரணமாக, காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலிய, நியூசிலாந்து தீ மற்றும் அவசர சேவைகளுக்கான தேசிய கவுன்சில் (AFAC) கணித்துள்ளது.

"இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் சராசரிக்கு மேற்பட்ட மழைப்பொழிவு மற்றும் குறிப்பிடத்தக்க வெள்ளம் காணப்படுவதால், இந்த பிராந்தியங்களில் உள்ள ஈரமான நிலம் தாவரங்களின் வளர்ச்சியை அதிகரிப்பதாகவும், கடும் வெப்பம் வரும்போது தீ அபாயமும் அதிகரிப்பதாக" AFAC தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
NSW தூர மேற்கு பிராந்தியத்தில் உள்ள Tilpa விற்கு SES புதிய வெளியேற்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது. டிசம்பர் தொடக்கத்தில் இருந்து நடுப்பகுதி வரை Darling ஆற்றில் பெரும் வெள்ளம் எதிர்பார்க்கப்படுகிறது என்று SES கூறியது.

மத்திய மேற்கு NSW இல் உள்ள கிழக்கு Condobolinனில் வசிக்கும் சிலரும், Lachlan ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Lismoreரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் Southern Cross University (SCU)இலுள்ள தற்காலிக தங்குமிடத்தை நாடலாம் என்று NSW வெள்ள மீட்பு அமைச்சர் Steph Cooke கூறினார்.
மாநிலத்தின் வடகிழக்கில் உள்ள இத்தளம் 200 பேர் வரை தங்கக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது என்று அமைச்சர் Cooke கூறினார்.

தற்காலிக தங்குமிடங்கள் இப்போது SCU, Evans Head, Coraki, Pottsville, Wardell மற்றும் Wollongbar ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

தங்குமிட தேவைப்படும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் Service NSWஐ 13 77 88 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் அல்லது ஐப் பார்வையிடவும்.

NSW மாநிலத்தின் தென்மேற்கில், வெள்ள நீரில் இருந்து ஒரு இளைஞனின் உடலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த நபர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படவில்லை.

Nichols Point, Bruces Bend மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான வெளியேற்ற எச்சரிக்கை தற்போதைய நிலையிலேயே இருப்பதாக விக்டோரியா SES தெரிவித்துள்ளது.
இந்த வாரத்தின் பிற்பகுதியில், விக்டோரியாவிலிருந்து Murray ஆற்றினுள் ஒரு நாளைக்கு சுமார் 175 ஜிகாலிட்டர் வெள்ளநீர் நுழைந்தால், தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் 3500 முதல் 4000 சொத்துக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

இரண்டாம்கட்டமாக டிசம்பரின் பிற்பகுதியில், ஒரு நாளைக்கு 185 ஜிகாலிட்டர் வெள்ளநீர் நுழையலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாயத்திலுள்ள குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கவென அதிகாரிகள் அவர்களது வீடுகளுக்குச் செல்வதாக Premier Peter Malinauskas தெரிவித்தார்.

ஆகிய இணையத்தளங்களைப் பார்ப்பதன் மூலம் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் உயிருக்கு ஆபத்தான அவசர சூழ்நிலையில் இருந்தால் 000 ஐ அழைக்கவும். புயல், காற்று, hail அல்லது மரங்கள் வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டால் மற்றும் மரக்கிளை உங்கள் வீடு அல்லது ஆட்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், NSW SES-ஐ 132 500 என்ற எண்ணிலும் Victoria Emergency Services-ஐ 1800 226 226 என்ற எண்ணிலும் அழைக்கவும்.

பிற மொழிகளில் இந்தத் தகவலைப்பெற மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவையை 131 450 என்ற எண்ணில் அழைத்து, VicEmergency Hotline ஐஅழைக்கச் சொல்லுங்கள்.

நீங்கள் காது கேளாதவராகவோ அல்லது பேச்சு/தொடர்புக் குறைபாடு உள்ளவராகவோ இருந்தால், 1800 555 677 என்ற எண்ணில் National Relay சேவையைத் தொடர்புகொண்டு, VicEmergency Hotline ஐ அழைக்கும்படி அவர்களிடம் கேளுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 30 November 2022 4:05pm
Updated 30 November 2022 4:58pm
Source: SBS


Share this with family and friends