வீடுகளில் மின்சார திறனை மேம்படுத்த அரசு உதவுகிறது

Power lines and Solar panels can be seen in Brisbane, Wednesday, June 15, 2022. Households and businesses in southeast and coastal areas are being warned of possible blackouts until Thursday morning. (AAP Image/Jono Searle) NO ARCHIVING Source: AAP / JONO SEARLE/AAPIMAGE
வீடுகளை புதுப்பிக்க – குறிப்பாக மின்சார திறனை மேம்படுத்தி மின்சார செலவை குறைக்கவும், சுற்றுப்புற சூழலுக்கு வலு சேர்க்கவும் விரும்பும் குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் அரசு கடன் வழங்க முன்வந்துள்ளது. வீடுகளில் இரட்டை மெருகூட்டல் ஜன்னல்கள் அல்லது சோலார் பேனல்கள் பொருத்துவது போன்ற மேம்படுத்தல்களுக்கு அரசிடமிருந்து கடன் பெறலாம். ஒரு வீட்டுக்கு 110,000 டாலர்வரை கடன் வழங்கப்படும் என்றும், இது வீடுகளில் மிகவும் திறமையான சாதனங்களை பொருத்தவும், முதலீடு செய்யவும் குடும்பங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது. இதன்மூலம் மின்சாரம் குறைவாக பயன்படுத்தப்படும் அல்லது மின் ஆற்றல் திறன் மேம்படும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இப்படியான கடன் வழங்க அரசு ஒரு பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.
பெரும் நிறுவனங்களிடமிருந்து அதிக வரி வசூலிப்பு

A kitchen gas stove burner at a residential property in Melbourne, Thursday, June 16, 2022. The national electricity market has been suspended as the market operator says it has become impossible to operate within the rules. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING Source: AAP / JOEL CARRETT/AAPIMAGE
Petroleum Resources Rent Tax அதிகரிக்கிறது: Liquefied Natural Gas சுருக்கமாக LNG என்று அழைக்கப்படும் திரவநிலையில் இயற்கை வாயுவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மிக முக்கிய நாடுகளில் ஆஸ்திரேலியா ஒன்று. அப்படியான ஏற்றுமதி செய்யும் பெரும் வர்த்தக நிறுவனங்களின் லாபம் பல மடங்கு அதிகரித்துள்ளது.ஆனால் அரசுக்கு இதனால் பெரிய லாபம் எதுவும் இதுவரை இல்லை. எனவே LNG மூலம் அதிக லாபம் ஈட்டும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் அதிக வரி செலுத்த அரசு நிர்பந்த்தித்துள்ளது. எனவே அரசுக்கு அதிகமாக $2.4 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும்.
மருந்து வாங்கும் செலவு குறைகிறது

File photo dated 16/11/09 of a pharmacist stocking shelves at a chemist. Patients will be able to obtain prescription medicines and oral contraception directly from pharmacies under a blueprint to ease the pressure on GPs??? appointments. Issue date: Tuesday May 9, 2023.. Treatments for seven common conditions including earache, sore throat and urinary tract infections will be available without seeing a doctor under plans announced by Rishi Sunak. See PA story HEALTH Pharmacies. Photo credit should read: Julien Behal/PA Wire Credit: Julien Behal/PA/Alamy
ஒரு நோயாளி 300 வகையான பொதுவான மருந்துகளை தற்போது 30 நாட்களுக்கு மட்டுமே வாங்க முடிகிறது. ஆனால் இதற்குப் பதிலாக அந்த நோயாளி இனிமேல் 60 நாட்கள் வரை மருந்துகளை வாங்க முடியும். இதன்மூலம் நோயாளிகள் மருந்து வாங்கும் செலவில் வருடத்திற்கு $180 வரை சேமிக்க இயலும்.
சிகரெட் விலை உயர்கிறது

epa10379027 A man smokes a cigarette as he shows cigarette sticks at a street in Jakarta, Indonesia, 27 December 2022. Indonesian President Joko Widodo has issued Presidential Decree of the Republic of Indonesia concerning the 202 government regulation drafting program, one of them is to stipulate a ban on the sale of cigarette sticks, on the restriction of addictive substances in tobacco products for health. EPA/ADI WEDA Source: EPA / ADI WEDA/EPA
புகைப்பிடிப்பவர்கள் சிகரெட்டுக்கு இனி அதிக வரி செலுத்த வேண்டும். எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிகரெட்டுக்கு 5 சதவீத வரி அதிகரிக்கவுள்ளது. மேலும் இப்போது பேஷன் trending என்று பெரும்பாலும் இளைஞர்கள் புகைக்கும் வேப்பர்கள் கிடைப்பதை அரசு கடினமாக்கியுள்ளது. சிகரெட் மற்றும் புகையிலைக்கான வரி மாற்றங்கள் மூலம் அரசுக்கு கூடுதல் $3.3 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும். ஆனால் அந்த வருவாயை புகைபிடித்தல் மற்றும் வேப்பர்கள் பிடிப்பதைத் தடுக்கவும், புகை பிடித்தல் மூலம் உருவாகும் நோய்களுக்கான சிகிச்சைக்கும் செலவிட அரசு திட்டமிட்டுள்ளது.
மில்லியனராக ஓய்வு பெறுவோரிடமிருந்து அதிக வரி வசூலிப்பு

Australian dollars in Sydney, Thursday, January 3, 2019. The Australian dollar fell sharply against the U.S. dollar around 9.30am AEDT on Thursday, trading at 67.49 US cents. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE
சுமார் 70,000 பேர் $3 மில்லியன் டாலருக்கும் அதிகமாக தங்கள் ஒய்வு ஊதிய நிதியில் அல்லது Superannuation Fundயில் வைத்துள்ளனர். எனவே, ஒருவர் $3 மில்லியன் டாலருக்கு மேல் வைத்திருந்தால் அப்படியான அதிக பட்ச நிதிக்கு அரசு 15 சத வரிக்கு பதிலாக 30 சதவீதம் வரி வசூலிக்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் சுமார் $950 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும்.
பிறருடன் இணைந்து வீடு வாங்குவது எளிதாகிறது

Homes are seen at a new housing estate at Springfield in Ipswich, Wednesday, September 7, 2022. The RBA (Reserve Bank of Australia) has increased official interest rates to a seven-year high of 2.35 per cent. (AAP Image/Darren England) NO ARCHIVING Source: AAP / DARREN ENGLAND/AAPIMAGE
Home Guarantee Scheme - வீடு வாங்க உத்திரவாத திட்டத்தின் கீழ் ஒரு வீட்டை வாங்க விரும்பும் ஒருவர் தங்களுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள், உறவில் இருப்பவர்கள், யணிந்து வர்த்தகம் செய்கின்றவர்கள் என்று யாரோடு வேண்டுமானாலும் இணைந்து வீடு வாங்கலாம். இப்படியான புதிய மாற்றங்களின் ஒரு பகுதியாக, திருமணமான அல்லது உறவில் இருக்கும் இருவர் என்ற தகுதிக்கு பதிலாக இரண்டு பேர் இணைந்து கடன் வாங்க இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இன்னும் குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் Citizenship குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமல்ல, Permanent Residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை கொண்டவர்களும் குடியிருப்பாளர்களும் Home Guarantee Scheme - வீடு வாங்க உத்திரவாத திட்டத்தின் கீழ் ஒரு வீட்டை வாங்க தகுதி பெறுவார்கள்.
மீன் வாங்குவோர் நலனுக்காக அரசின் அதிரடி

Seafood is displayed during the Good Friday trade at the Sydney Fish Market in Sydney, Friday, April 7, 2023. (AAP Image/Bianca De Marchi) NO ARCHIVING Source: AAP / BIANCA DE MARCHI/AAPIMAGE
About 70 per cent of seafood consumed by Australian consumers is imported ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கடல் உணவுகளை – மீன்களை, அந்த மீன் எந்த நாட்டிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று வியாபாரிகள் எழுதவேண்டும் என்பது கட்டாயமாகிறது. இந்த கண்காணிப்புக்காக அரசு $1.6 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.
மொபைல் வழி நடக்கும் பித்தலாட்டத்தை தடுக்க நடவடிக்கை

An Emergency Alert is shown on the screen of a smartphone at Twickenham. The UK government tests a service meant to warn the public of imminent dangers to life. The UK conducted its first test of a new emergency alert service on Sunday, with millions of mobile phones emitting a loud alarm and vibration at 3:00 pm. (Photo by Tejas Sandhu / SOPA Images/Sipa USA) Credit: SOPA Images/Sipa USA
Linkt அல்லது myGov போன்ற அரசின் உத்தியோகபூர்வ நிறுவனங்களைப் போல இயங்கி ஆள்மாறாட்டம் செய்வது அல்லது "ஸ்பூஃப்" குறுஞ்செய்திகளை அனுப்பி ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க SMS அனுப்புநர் ஐடி பதிவேட்டை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு $10.5 மில்லியன் டாலர் செலவழிக்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், அரசாங்க பிராண்ட் பெயர்களில் இருந்து போலியான குறுஞ்செய்திகளை அனுப்ப முடியாது என்று அரசு கருதுகிறது.
—————————————————————————————————————————————————————————————————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.