இந்தியாவில் தயாரான Covid தடுப்பூசியை ஆஸ்திரேலியா அங்கீகரித்தது

மருந்துகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான Therapeutic Goods Administration (TGA) மேலும் இரண்டு COVID-19 தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. Covaxin மற்றும் BBIBP-CorV தடுப்பூசிகளும் ஏற்றுக் கொள்ளப்படும் தடுப்பூசிகள் என்பதால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மேலும் பலர் நாடு திரும்ப ஒழுங்குகள் மேற் கொண்டுள்ளார்கள்.

Ashwini Kumar and his wife got married earlier this year.

Ashwini Kumar and his wife will be returning home to Melbourne after getting stuck in Bangalore because they received the Covaxin vaccine. Source: Supplied/Ashwini Kumar

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Covaxin மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட BBIBP-CorV தடுப்பூசிகளை கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.

இந்தத் தடுப்பூசிகளைப் பெற்றவர்களும் இந்நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக TGA வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

TGA அங்கீகரித்துள்ள தடுப்பூசிகளில் ஒன்றை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் தான் தற்போது நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
“வெளி நாட்டு மாணவர்கள் திரும்புவதற்கும், திறமை அடிப்படையில் இங்கு தொழில் புரிய வருபவர்கள் வருவதற்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும்” என்று TGA செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“இந்திய மற்றும் சீன குடிமக்கள் மட்டுமின்றி இந்த பிராந்தியத்தில் மேலே குறிப்பிட்ட இரண்டு தடுப்பூசிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட பிற நாடுகளில் இருந்தும் வருபவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருந்தால் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.”

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் வெளி நாடுகளிலிருந்து பயணிகள் இங்கு வர ஆரம்பித்திருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 4 November 2021 2:03pm
Updated 12 August 2022 3:01pm
By Rayane Tamer, Biwa Kwan
Source: SBS News


Share this with family and friends