Key Points
- NSW மற்றும் விக்டோரியாவில் புதிய கோவிட் தொற்றுகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன
- சீனாவிலிருந்து வரும் பயணிகளை ஆஸ்திரேலியா கண்காணிக்கும், ஆனால் இந்த நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
- NYEக்கான கோவிட்-பாதுகாப்பு திட்டத்தை கொண்டிருக்குமாறு அதிகாரியகள் ஊக்குவிக்கின்றனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் இந்த வாரம் 27,665 புதிய கோவிட் தொற்றுகளுடன் மற்றொரு வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. இது கடந்த வாரம் 38,610 ஆக இருந்தது.
மாநிலத்தில் கோவிட் தொடர்பிலான இறப்புக்களும் கணிசமாகக் குறைந்துள்ளன. இந்த வாரம் 32 இறப்புகள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தில் இது 78 ஆக இருந்தது.
இதேபோல் விக்டோரியா இந்த வாரம் புதிய கோவிட் தொற்றுகள் மற்றும் கோவிட் இறப்பு ஆகிய இரண்டிலும் வீழ்ச்சியைக் கண்டது.
முந்தைய வாரத்தில் 24,238 தொற்றுகள் பதிவாகியிருந்த நிலையில், இந்தவாரம் 16,568 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த வாரம் 69 இறப்புகள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தில் இது 100 ஆக இருந்தது.
நாட்டிற்குள் கோவிட் தொற்றுகள் அதிகரித்துள்ள போதிலும் வெளிநாடுகளில் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை ஜனவரி 8 முதல் சீனா முடிவுக்குக் கொண்டுவருகிறது.
ஜப்பான், இந்தியா, இத்தாலி மற்றும் தைவானில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டைப்போன்று, ஜனவரி 5 முதல் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்காவும் கட்டாய கோவிட் சோதனையை நடைமுறைப்படுத்தவுள்ளது.
சீனாவிலிருந்து வருபவர்கள் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு நிலைமையை "கண்காணித்து வருகிறது" எனவும் "சுகாதார ஆலோசனைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் பிரதமர் Anthony Albanese வியாழக்கிழமை Sunriseஇடம் தெரிவித்தார்.
"இந்த நேரத்தில், சீனாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை." என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்த முடிவை தலைமை மருத்துவ அதிகாரி Paul Kelly ஆதரித்தார். சீனாவில் பரவலை ஏற்படுத்தும் மாறுபாடுகள் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் பரவிவிட்டன என்று அவர் விளக்கினார்.
இருப்பினும், அரசு இவ்விடயங்களில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் மருத்துவ ஆலோசனைகள் வெளியிடப்பட வேண்டும் எனவும், எதிர்கட்சியின் குடிவரவு தொடர்பான பேச்சாளர் Dan Tehan , ரேடியோ நேஷனலிடம் தெரிவித்தார்.
"முந்தைய அரசு ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தாக அவர் சுட்டிக்காட்டினார்.
புத்தாண்டை வரவேற்பதற்கான நிகழ்வுக்குச் செல்லும்போது, கோவிட்-பாதுகாப்பு திட்டத்துடன் செல்லுமாறு அதிகாரிகள் மக்களை ஊக்குவிக்கின்றனர்.
உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் கோவிட் சோதனையை மேற்கொள்ளுங்கள். வெளியில் அல்லது நன்கு காற்றோட்டமான பகுதிகளில் ஒன்றுகூடுங்கள். சமூக இடைவெளியைப் பேணமுடியாத இடங்களில் முகக்கவசத்தை அணியுங்கள்.
தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் அதேநேரம் வாய்வழி உட்கொள்ளும் கோவிட் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள நீங்கள் தகுதியுள்ளவரா என்பதைச் சரிபார்க்கவும்.
புத்தாண்டில் உங்கள் மருத்துவருடன் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், தேசிய கொரோனா வைரஸ் ஹெல்ப்லைனை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அவை 24 மணிநேரமும், 7 நாட்களும் திறந்திருக்கும். மேலும் வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு நீங்கள் தகுதியுள்ளவரா என்பதையும் கேட்டறியலாம்.
விடுமுறை நாட்களிலும் பின்வரும் சேவைகள் கிடைக்கும்:
- – . For people who are deaf or hard of hearing, text Lifeline on 0477 131 144
- youth portal –
- Access Mental Health Team – or
- Suicide Call Back Service –
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.