முக்கிய விடயங்கள்
- பூர்வீகக்குடி மற்றும் Torres Strait தீவு மக்களின் விவகாரங்களை பாதிக்கும் அரச கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் Indigenous Voice to Parliament என்ற கட்டமைப்பு உருவாக்கப்படுவது குறித்த கருத்து வாக்கெடுப்பில், இந்தக் கட்டமைப்பு வேண்டாம் என்று பெரும்பான்மையினர் வாக்களித்துள்ளனர்.
- ஆறு மாநிலங்களும் Northern Territory பிராந்தியமும் “இல்லை” என்று வாக்களித்துள்ள அதே நேரத்தில் ACT பிராந்தியம் மட்டும் 'ஆம்' என்று வாக்களித்துள்ளது.
- ஆஸ்திரேலிய மக்களை ஒன்று சேருமாறு பிரதமர் Anthony Albanese வலியுறுத்தினார்.
ஆஸ்திரேலிய அரசியலமைப்பில் பூர்வீகக் குடி மற்றும் Torres Strait தீவு மக்களுக்கான Voice என்ற கட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கான முன்மொழிவை மக்கள் நிராகரித்துள்ளனர்.
சனிக்கிழமை நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பில், ஆறு மாநிலங்களிலும் Northern Territory பிராந்தியத்திலும் 'இந்தக் கட்டமைப்பு வேண்டாம்' என்ற வாக்கு அதிகமாகப் பதிவு செய்யப்பட்டது.
தேசிய அளவிலும் ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கையிலும் 'வேண்டாம்' வாக்கு முன்னிலையில் உள்ளது.
'ஆம்' என்ற வாக்கைப் பதிவு செய்த ஒரே ஒரு அதிகார வரம்பு ACTபிராந்தியம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவுகளால் ஏமாற்றமடைந்த பிரதமர் Anthony Albanese, இந்த முடிவு "நம்மை வரையறுக்காது, அதே வேளை, அது நம்மைப் பிரிக்காது" என்று வலியுறுத்தினார்.
"இப்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து, அதே சமரசமான இலக்கை அடைவதற்கு வேறு வழியைக் கண்டுபிடிப்பது அவசியம்" என்று அவர் மேலும் கூறினார்.

Australian Prime Minister Anthony Albanese delivers a statement on the outcome of the Voice Referendum at Parliament House.
"முன்மொழியப்பட்டதும் அதற்கான செயல் முறையும் நாட்டு மக்களை ஒன்றிணைப்பதற்காக வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும், எங்களைப் பிரிப்பதற்காக அல்ல," என்று அவர் கூறினார்.

Opposition Leader Peter Dutton and Shadow Minister for Indigenous Australians Senator Jacinta Price address the media following the referendum. Source: AAP / JONO SEARLE/AAPIMAGE
இந்த வாக்களிப்பைத் தொடர்ந்து, புதிய சிந்தனை கொண்ட பூர்வீகக்குடித் தலைவர்கள் உருவாகுவார்கள் என்று தான் நம்புவதாக, நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் விவகார அமைச்சரும், இந்தக் கருத்து வாக்கெடுப்பில் 'ஆம்' என்று வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்தவருமான Linda Burney கூறினார்.
பூர்வீகக்குடி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக “உண்மையான தீர்வுகளைத் தேட ஆஸ்திரேலியர்கள் விரும்புகிறார்கள்" என்பதையே இந்த முடிவு சுட்டிக் காட்டுகிறது என்று, பூர்வீகக்குடி பின்னணி கொண்டவரும், ‘இல்லை’ என்று வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்தவர்களில் முக்கியமானவருமான Nyunggai Warren Mundine கூறினார்.
"சில பூர்வீகக்குடி சமூகங்களில் நடக்கும் வன்முறை, துன்புறுத்தல்கள், கட்டாயக் கட்டுப்பாடு மற்றும் அழிவுகரமான நடத்தைக்கு மக்கள் கண்மூடித்தனமாக இருப்பதை நிறுத்த வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
பூர்வீகக்குடி மற்றும் Torres Strait தீவு மக்களின் விவகாரங்களை பாதிக்கும் அரச கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் Indigenous Voice to Parliament என்ற கட்டமைப்பு குறித்த அனைத்து விடயங்களையும், பூர்வீகக் குடி மக்களின் பார்வைகளையும் NITV மூலம் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
60ற்கும் மேற்பட்ட மொழிகளில் கட்டுரைகள், வீடியோக்கள் மற்றும் Podcastகளை அணுகவும், அல்லது சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வு, ஆவணங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இலவசமாகக் கண்டு களிக்கவும்
என்ற தளத்திற்கு செல்லவும்.
LISTEN TO

Voice நிராகரிக்கப்பட்டது - கருத்துத் தேர்தல் குறித்த விவரணம்
SBS Tamil
07:14
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.