ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration-Points System-இல் முக்கிய மாற்றம்!

Changes in 2020

Source: SBS

ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration விசாவின் முக்கிய அம்சமான points system-இல் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.

ஒருவர் Skilled Migration விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் புள்ளிகள் points system ஊடாக கணக்கிடப்படுவது வழக்கம்.

இம்முறையின்படி 60 புள்ளிகள் பெறும் ஒருவர் குறிப்பிட்ட பல துறைகளில் Skilled Migration ஊடாக ஆஸ்திரேலியாவில் குடியேற முடியும்.

எனினும் எதிர்வரும் ஜுலை 1ம் திகதியிலிருந்து இது 65 புள்ளிகளாக உயர்த்தப்படுகிறது.

ஜுன் 30ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் விண்ணப்பித்தவர்கள் இம்மாற்றத்தினால் பாதிக்கப்பட மாட்டார்கள்.

ஆனால் ஜுலை 1ம் திகதியிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் 65 புள்ளிகளைப் பெறுவதற்கு தகுதிபெற வேண்டும்.

இவ்வாறு cutoff-வெட்டுப்புள்ளியை அதிகரித்துக் கொண்டு செல்வதானது ஆஸ்திரேலியாவில் குடியேற முற்படும் பலரைப் பாதிக்கும் ஒன்று என பல தரப்பிலிருந்தும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிகளவானோர் ஆஸ்திரேலியாவில் குடியேற விண்ணப்பிக்கும் போது அதற்கான வெட்டுப்புள்ளியை அதிகரிப்பது நியாயமே என மற்றுமொரு தரப்பினர் தெரிவித்துள்ளதுடன், உயர் கல்வித்தகைமை வாய்ந்தவர்கள் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள் என சுட்டிக்காட்டியுள்ளனர்.




Share
Published 28 June 2018 6:47pm
Updated 28 June 2018 7:15pm
Presented by Renuka


Share this with family and friends