ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் கூட்டாக இணைந்து QUAD என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, அமெரிக்க தலை நகர் Washingtonஇல் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றிருக்கும் எமது பிரதமர் Scot Morrison இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.
இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார, ராணுவ உறவுகளை வலுப் படுத்துவது குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசித்ததாகத் தெரிய வருகிறது. இந்த சந்திப்பு முடிந்த பின்னர், “வளரும் நாடுகளில் புதிய தொழில் நுட்பங்களை நாம் அறிமுகப்படுத்தாவிட்டால் காலநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கான பலரது இலட்சியங்கள் சாத்தியப்படாமல் போகலாம் என்று நான் அஞ்சுகிறேன்,” என்று பிரதமர் Scot Morrison அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அனைத்து இடங்களிலும் நாம் வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும்
“காலநிலை மாற்றத்தில் நாம் ஒரு வித்தியாசத்தை உருவாக்க விரும்பினால், முன்னேறிய பொருளாதாரங்களில் மட்டுமல்லாமல், அனைத்து இடங்களிலும் நாம் வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியா வருமாறு பிரதமர் Scot Morrison இடம் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் அழைப்பு விடுத்தார்.
பிரதமர் Scot Morrison கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்தியா செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நாடு முழுவதும் காட்டுத்தீ பரவியிருந்ததால் அவரது பயணம் தடைப்பட்டது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.