ஐந்து முதல் 11 வயது வரையான எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு,Pfizer-இன் குழந்தைகளுக்கான தடுப்பூசியை, ஒரு பூஸ்டராக அல்லது நான்காவது தடுப்பூசியாக வழங்கலாம் என்று நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) கூறியுள்ளது.
கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடு மற்றும் குறைபாடுகள் அல்லது சிக்கலான பல சுகாதார நிலைமைகள் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி அனுமதிக்கப்படும் என்று ATAGI தெரிவித்துள்ளது.
சமீபத்திய கோவிட்-19 தொற்று அல்லது முதன்மை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி ஆகியவற்றுக்கு இடையே மூன்று மாத இடைவெளியை ATAGI பரிந்துரைக்கிறது.
கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ள குழந்தைகள் மூன்றாவது முதன்மை தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள்.
Modernaவின் Spikevax மற்றும் bivalent தடுப்பூசிகள் தற்போது இந்த வயதினருக்கு அனுமதிக்கப்படவில்லை.
ஃபெடரல் நிதிநிலை அறிக்கையில் கோவிட் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கென 2.6 பில்லியன் டாலர்களை ஆஸ்திரேலிய அரசு வழங்கியுள்ளது. இந்த நிதி முக்கியமாக தடுப்பூசிகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமெரிக்கா மற்றும் UK போன்ற நாடுகளைப்போல Long COVID-க்கு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கவில்லை என்ற விமர்சனத்தை லேபர் அரசு எதிர்கொண்டுள்ளது.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் Mark Butler, தனது அரசு Long COVID பற்றிய ஆராய்ச்சிக்கு நிதியளித்து வருகிறது என்றார்.
Long COVID தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கைக்காக அரசு காத்திருப்பதாக அவர் கூறினார்.
கோவிட் செலவினங்களுக்கான மாநிலங்களுடனான 50-50 செலவுப் பகிர்வு ஏற்பாட்டை டிசம்பரில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான லேபர் அரசின் முடிவை ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் (AMA) விமர்சித்துள்ளது
இது மருத்துவமனைகளில் "பேரழிவு தரும் தாக்கத்தை" ஏற்படுத்தும் என்று AMA கூறியது.
அக்டோபர் 14 ஆம் தேதியுடன் கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு முடிவடைந்த போதிலும், கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் Mark Butler கூறினார்.
கோடையில் ஒரு புதிய அலை குறித்து சில மாநில தலைமை சுகாதார அதிகாரிகளிடமிருந்து ஆலோசனை பெற்றுள்ளதாக அமைச்சர் Butler தெரிவித்தார்.
கோடை காலத்தில் மற்றொரு அலை சாத்தியம் என்றாலும், பல மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட சிறியதாகவும் குறுகியதாகவும் அது இருக்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள் என அமைச்சர் கூறினார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த வாரம் புதுப்பிக்கப்பட்ட பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றார்.
இது அவரது மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி அல்லது கொரோனா வைரஸ் தடுப்பூசியின் ஐந்தாவது சுற்று ஆகும்.
சுவாசத்துடன் உள்ளிழுக்கக்கூடிய கோவிட்-19 பூஸ்டர் மருந்தை வழங்கும் உலகின் முதல் நகரமாக Shanghai மாறியுள்ளது.
இந்த தடுப்பூசியை சீன மருந்து நிறுவனமான CanSino உருவாக்கியதுடன் செப்டம்பர் மாதம் ஒப்புதலையும் பெற்றது.
அக்டோபர் 23 உடன் முடிவடைந்த வாரத்தில், புதிய வாராந்திர உலகளாவிய கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 சதவீதமும், இறப்புகள் 13 சதவீதமும் குறைந்துள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜேர்மனி, பிரான்ஸ், சீனா, அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் அதிகளவு உலகளாவிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.