சிட்னியின் மேற்கில் உள்ள Bankstownஐச் சேர்ந்த ஒரு தந்தை, வியாழன் அன்று நடந்த Powerball சீட்டிழுப்பில் $100 மில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.
அவர் ஆஸ்திரேலியாவின் Powerball சீட்டிழுப்பில் division oneஇல் வென்ற இரண்டாவது பெரிய லாட்டரி வெற்றியாளராக மாறியுள்ளார்.
2019 ஜனவரியில் $107 மில்லியனுக்கும் அதிகமாக வென்ற சிட்னி செவிலியர் ஒருவர் முதலிடத்தில் உள்ளார்.
இதேவேளை நேற்றைய Powerball-ஐ வென்ற நபரை லாட்டரி அதிகாரிகள் தொடர்புகொண்டபோது அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியதாகவும், தான் தொடர்ந்து வேலை செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார்.
"வேலையா?! நாங்கள் இப்போது பலகோடிக்குச் சொந்தக்காரர்கள் என்று அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கையை மாற்றும் அந்த தொலைபேசி அழைப்பைப் பெற்றபோது, தான் கனவு காணவில்லை என்பதை உறுதிப்படுத்த முகத்தில் அறைந்து பார்த்துவிட்டு, "நிச்சயமா?! சரியான ஆளுடன்தான் பேசுகிறீர்களா?" என்று அந்த நபர் கேட்டுள்ளார்.
"நாங்கள் இன்றிரவு தூக்கம் வராமல் திண்டாடப்போகிறோம்." எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு புதிய வீட்டை வாங்கி எதிர்காலத்திற்காக தங்களை தயார்செய்துகொள்வார்கள் என்று அந்த நபர் கூறினார்.
"இது நம்பமுடியாதது! நான் 100 மில்லியன் டொலர்களை வென்றுள்ளேன்!? நான் கனவு காண்கிறேனா? நான் இப்போது கோடீஸ்வரனா?!" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Division one வெற்றியாளருடன், வியாழன் Powerballஇல் $77.61 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மொத்தம் 3,867,940 பரிசுகள் வெல்லப்பட்டுள்ளன. இதில் 10 division two வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் $216,070 டொலர்களை வென்றுள்ளனர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.