விக்டோரியாவில் 25 பேர், நியூ சவுத் வேல்ஸில் 22 பேர் மற்றும் குயின்ஸ்லாந்தில் 7 பேர் உட்பட குறைந்தது 62 COVID-19 இறப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளன.
பதின்மவயதினர் (12-17 வயதுடையவர்கள்) செப்டம்பர் 5 முதல் புரத அடிப்படையிலான Novavax கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
Long-COVID நீண்ட கால கோவிட் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு நாளும் சுமார் 31,000 ஆஸ்திரேலியத் தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக பணியிட விடுப்பிற்கு விண்ணப்பிப்பதாக News Corp வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 5 முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Modernaவின் Spikevax கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
பெற்றோர்கள் கூடுதல் தகவல்களையும் இங்கே காணலாம். இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவு நடைமுறை இன்னும் அரம்பமாகவில்லை.
30-49 வயதுடைய கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள் இரண்டாவது பூஸ்டர் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அரசு கூறுகிறது.
இருப்பினும், மூன்று கோவிட் தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட பெண்களுக்கு கடுமையான கோவிட் நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கான ஆபத்து மிகக் குறைவு என்றும் தெரிவிக்கப்படுகிறது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 5,645 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 22 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 2,935 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 25 பேர் மரணமடைந்தனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 2,091 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 1,429 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 770 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டஸ்மேனியாவில் புதிதாக 265 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ACT- இல் புதிதாக 247 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து நான்கு வாரங்களாக அதிகரித்து வந்த குரங்கம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, நெதர்லாந்து, பெரு மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் அதிகமானோர் குரங்கம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.